தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது, நான்கு பேர் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் நிலத்தடி நீர் மாதிரிகளில் கண்டறியப்பட்ட பாதரச மாசுபாட்டின் மூலத்தைக் கண்டறிய, நீர் மற்றும் மண் மாதிரிகளை மிக விரிவான முறையில் ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் உள்ள சில இடங்களில் இப்பாதரசத்தின் அளவு சுமார் 0.0001 மி.கி/லிட்டர் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டியதாக முந்தைய அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.