TNPSC Thervupettagam

கடல் ஆராய்ச்சி திட்டம்: சாகர் மைத்ரி-5

January 24 , 2026 3 days 43 0
  • இந்தியாவின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான ஐஎன்எஸ் சாகர்த்வானி, சாகர் மைத்ரி-5 முன்னெடுப்பிற்காக கொச்சியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கப்பட்டது.
  • 1994 ஆம் ஆண்டு ஜூலையில் படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் சாகர்த்வானி இந்தியக் கடற்படைக்கான கடல்சார் மற்றும் ஒலியியல் தரவுகளை சேகரிக்கிறது.
  • சாகர் மைத்ரி-5 என்பது கடல்சார் மற்றும் தொடர்புடைய பல் துறைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி முன்னேடுப்பினைக் குறிக்கிறது என்பதோடு இது கடல் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.
  • இந்தத் திட்டத்தில் ஓமன், மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட எட்டு இந்தியப் பெருங்கடல் விளிம்போர (IOR) நாடுகள் அடங்கும்.
  • இது மாலத்தீவுடன் அறிவியல் ஒத்துழைப்பு, சமூக-பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு கடல்சார் ஆய்வுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்