TNPSC Thervupettagam

கடல் உணவுகள் ஏற்றுமதி 2025-2026

June 3 , 2026 7 days 90 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவுகள் ஏற்றுமதி சாதனை அளவாக 8.46 பில்லியன் அமெரிக்க டாலர்களை (₹73,890 கோடி) எட்டியுள்ளது.
  • இந்த நிதியாண்டில் இந்தியா 19.72 லட்சம் மெட்ரிக் டன் கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
  • உறைந்த இறால் தொடர்ந்து மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக உள்ளதுடன் இது மொத்த ஏற்றுமதி வருவாயில் 66.52% பங்களிக்கிறது.
  • அமெரிக்கா தொடர்ந்து இந்திய கடல் உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள அதே வேளையில் சீனாவிற்கான ஏற்றுமதியும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) இந்த ஏற்றுமதித் தரவை 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று வெளியிட்டது.
  • விசாகப்பட்டினம், ஜவஹர்லால் நேரு துறைமுகம், கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகியவை முக்கிய ஏற்றுமதித் துறைமுகங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்