2023 ஆம் ஆண்டில், கடல் வெப்ப அலைகள் (MHWs) உலகளாவிய கடல் மேற்பரப்பில் 96 சதவீதப் பகுதிகளைத் தாக்கியது.
இந்த நிகழ்வுகள் இதற்கு முந்தைய சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாக நீண்ட காலம் நீடித்தன.
MHWs என்பது குறிப்பிட்ட கடல் பகுதிகளில், மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நீடிக்கும் காலங்கள் ஆகும்.
2023 ஆம் ஆண்டில் மொத்த வெப்பச் செயல்பாடு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 53.6 பில்லியன் டிகிரி செல்சியஸ் நாட்களை எட்டியது.
இது 1982 ஆம் ஆண்டிலிருந்து, இதற்கு முந்தைய சராசரியை விட மூன்று நிலையான விலகல்களுக்கு மேல் உள்ளது.
வடக்கு அட்லாண்டிக் பகுதியானது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கி 525 நாட்கள் நீடித்த மிக நீண்ட MHW வெப்பநிலையைக் கண்டது.
எல் நினோ தொடங்கியபோது வெப்பமண்டல கிழக்கு பசிபிக் 1.63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உச்சத்தை எட்டியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடக்கு அட்லாண்டிக், வடக்கு பசிபிக், வெப்ப மண்டல கிழக்கு பசிபிக் மற்றும் தென்மேற்கு பசிபிக் ஆகியவை அடங்கும் என்பதோடு இவை கடல் வெப்பமாக்கல் முரண்பாடுகளில் 90 சதவீதத்தை உருவாக்குகின்றன.
இந்த நிகழ்வுகள் பவளப்பாறை வெளிர்தல், கடல்வாழ் உயிரினங்களின் பெரும் அளவிலான இடம்பெயர்வு, சேதமடைந்த உணவு வலையமைப்புகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு வழி வகுத்ததோடு மற்றும் பசிபிக் காட் முக்கியமான மீன்வளத்தில் சரிவுக்கும் வழி வகுத்தது.