TNPSC Thervupettagam

கடல்சார் வளர்ச்சிக்கான நீலப் பத்திரங்கள்

October 6 , 2026 4 days 89 0
  • நிலையான கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் பெருங்கடல் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, இந்தியாவின் முதல் நீலப் பத்திரத்தை (Blue bond) சாகர்மாலா பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SMFCL) நிறுவனம் வெளியிட உள்ளது.
  • இந்தியாவின் முதல் கடல்சார் துறை சார்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) SMFCL, 10 ஆண்டு கடன் பத்திரங்கள் மூலம் ₹600 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
  • நீலப் பத்திரங்கள் என்பவை பெருங்கடல்கள் மற்றும் நீர்வாழ் சூழ்நிலை மண்டலங்களின் நிலையான பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப் படும் சிறப்புக் கடன் ஆவணங்கள் ஆகும்.
  • இந்த நிதியானது கடல்சார் கடன், கட்டமைப்புகளுடன் கூடிய துறைமுகத் திட்டங்கள் மற்றும் கடலோர சாலை மேம்பாடு ஆகியவற்றை ஆதரிக்கும்.
  • 2018 ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை வெளியிட்டது, அதே நேரத்தில் பெலீஸ் 2021 ஆம் ஆண்டில் கடல் வளப் பாதுகாப்பிற்காக கடனுக்கான பெருங்கடல் பரிமாற்றத்தை (Debt-for-ocean swap) பயன்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்