TNPSC Thervupettagam

கடுகு மரபணு வளங்களுக்கான NBA நிதி

August 18 , 2026 13 hrs 0 min 17 0
  • தேசியப் பல்லுயிர் ஆணையம் (NBA), மெஸ்ஸர்ஸ் பயோனியர் ஓவர்சீஸ் பெரு நிறுவனத்திடமிருந்து அணுகல் மற்றும் பயன் பகிர்வு (ABS) மூலம் நிதியை விடுவித்துள்ளது.
  • பயோனியர் ஓவர்சீஸ் பெருநிறுவனமானது, இந்தியாவின் உயிரியல் வளங்களைப் பயன்படுத்தி பத்து வணிகரீதியான கடுகு (பிராசிகா ஜுன்சியா) கலப்பின வகைகளை உருவாக்கியுள்ளது.
  • ஒவ்வொரு மாநிலத்திலும் கடுகு சாகுபடி செய்யப்படும் பரப்பளவின் அடிப்படையில் ABS பங்கு கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்த செயல்முறையானது, நகோயா நெறிமுறை மற்றும் குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர் தன்மை கட்டமைப்பின் இலக்கு 13 ஆகியவற்றின் கீழ் உள்ள நியாயமான மற்றும் சமமான பயன் பகிர்வுக் கொள்கையுடன் ஒத்துப் போகிறது.
  • இந்தியாவின் கடுகு சாகுபடியில் ஏறக்குறைய 42 சதவீதம் ராஜஸ்தானில் உள்ளது.
  • இதுவே அதிகபட்ச பயனைப் பெறுகிறது.
  • இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்