TNPSC Thervupettagam

கன சதுர வடிவ மண்டை ஓடு – மெக்சிகோ

December 25 , 2025 13 days 53 0
  • மெக்சிகோவில் உள்ள பால்கன் டி மான்டெசுமா தளத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கனசதுர வடிவ மனித மண்டை ஓட்டைக் கண்டெடுத்துள்ளனர்.
  • இந்த மண்டை ஓடு ஆனது 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இடை அமெரிக்க பண்பாட்டுக் காலத்தில் (கி.பி 400–900) முன்பு வாழ்ந்த சுமார் 40 வயதுடைய ஒரு மனிதனுடையது ஆகும்.
  • அறிவியல் பகுப்பாய்வு, மண்டை ஓட்டின் வடிவம் ஆனது குழந்தை பருவத்தில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட மண்டை ஓடு சிதைவால் ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது.
  • மண்டை ஓடு வளரும்போது அதை மறுவடிவமைக்க தட்டுகள் மற்றும் கட்டுகளைப் பயன்படுத்தி மண்டை ஓடு சிதைவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கனசதுர வடிவம் ஆனது இடை அமெரிக்க பிராந்தியத்தில் காணப்பட்ட ஓர் அரிய மற்றும் இதற்கு முன்னர் பதிவாகாத பாணியாகும்.
  • இந்த நடைமுறை ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய சமூகங்களின் சமூக அடையாளம், சடங்கு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்