TNPSC Thervupettagam

கரியாச்சல்லி தீவு

July 4 , 2025 14 hrs 0 min 13 0
  • தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவை மீட்டெடுக்க தமிழக அரசு 50 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது.
  • கடல் மட்ட உயர்வு மற்றும் பவளப்பாறை சேதங்கள் காரணமாக இந்தத் தீவு அதன் பரப்பில் 71 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்துள்ளது.
  • 1969 ஆம் ஆண்டில் சுமார் 20.85 ஹெக்டேராக இருந்த அதன் பரப்பு, 2018 ஆம் ஆண்டில் தற்போது 5.97 ஹெக்டேர் ஆக மட்டுமே இருந்தது.
  • இது புயல் மற்றும் சுனாமிகளுக்கு எதிராக ஒரு இயற்கையான கேடயமாகச் செயல் படுகிறது என்பதோடு குறிப்பாக 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்த முக்கிய ஒரு நடவடிக்கையானது அறியப் பட்டது.
  • இந்தத் திட்டமானது TN SHORE (தமிழ்நாடு அரசின் கடல் வளங்களை மிக நிலையான முறையில் பயன்படுத்துதல்) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் தீவின் கடற்கரையைப் பாதுகாக்கவும் கடல்வாழ் உயிரினங்களை மிக நன்கு மீளுருவாக்கம் செய்யவும் அங்கு சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் வடிவமைக்கப்பட்ட 8,500 செயற்கையான பவளப்பாறைத் தொகுதிகள் நிலை நிறுத்தப்பட உள்ளன.
  • இந்த ஒரு முயற்சியானது மீன்பிடி வாழ்வாதாரம் மற்றும் பருவநிலை மீள்தன்மையை ஆதரிப்பத்தோடு சேர்த்து, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தத் தீவு மறைந்து போவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்