கருக்கலைப்பிற்கான சட்டமுறைப் பாதுகாப்பு ரத்து – அமெரிக்கா
June 28 , 2022 1240 days 494 0
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அங்கு சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பிற்கான அரசியலமைப்புப் பாதுகாப்பை ரத்து செய்துள்ளது.
அமெரிக்கப் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளை மாற்றுவதற்காக 1973 ஆம் ஆண்டின் ரோ vs வேட் வழக்கின் தீர்ப்பைத் தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பானது ரத்து செய்துள்ளது.
அந்த நாட்டிலுள்ள ஏறக்குறைய பாதியளவு மாநிலங்களில் கருக்கலைப்புத் தடைகள் விதிக்கப்பட இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1973 ஆம் ஆண்டு வழக்கானது அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கான அரசியலமைப்பு உரிமையை நிறுவ வழி வகுத்தது.