TNPSC Thervupettagam

கர்நாடகா ரோஹித் வெமுலா மசோதா 2026

April 21 , 2026 5 days 90 0
  • கர்நாடக அமைச்சரவை ரோஹித் வெமுலா (பாகுபாடு, ஒதுக்குதல் அல்லது அநீதி தடுப்பு) (கல்வி மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) மசோதா, 2026-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின (ST) மாணவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கர்நாடகாவில் உள்ள பொது, தனியார், தொண்டு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை உள்ளடக்கியது.
  • மாணவர் சேர்க்கை மறுப்பு, சாதிய ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் நிதி ரீதியான துன்புறுத்தல் உட்பட சுமார் 30 வகையான பாகுபாடுகளை இந்த மசோதா பட்டியலிடுகிறது.
  • விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் ₹10 லட்சம் வரையிலான அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை இது வழங்குகிறது.
  • கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடு தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழிமுறைகளையும் இந்தச் சட்டம் நிறுவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்