TNPSC Thervupettagam

நீர் நடுநிலை ரயில்வே பணிமனை

April 21 , 2026 5 days 83 0
  • அகமதாபாத்தில் உள்ள கங்காரியா ரயில்பெட்டி பராமரிப்புப் பணிமனையானது, இந்தியாவின் முதல் நீர் நடுநிலை ரயில்வே பணிமனையாக மாறியுள்ளது.
  • இது மறுபயன்பாடு மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் தினமும் சுமார் 1.60 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமிக்கிறது.
  • இந்தப் பணிமனை தாவரங்களைப் பயன்படுத்தி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் இயற்கையான செயல்முறையான தாவர வழிச் சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்தி கழிவுநீரைச் சுத்திகரிக்கிறது.
  • ரயில்வே செயல்பாடுகளில் மீண்டும் பயன்படுத்துவதற்காக, வடிகட்டுதல் மற்றும் புறஊதா கதிர்  கிருமி நீக்கம் மூலம் தண்ணீர் மேலும் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இந்த முன்னெடுப்பு நீர் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கிறது, நன்னீர் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில்வே செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்