TNPSC Thervupettagam

கர்நாடகாவின் மாநில இருவாழ்வி

November 10 , 2026 4 days 96 0
  • அரசாணையின் மூலம் மலபார் மரத்தேரையை (Malabar Tree Toad) தனது மாநில இருவாழ்வியாக அங்கீகரித்ததன் மூலம், மாநில இருவாழ்வி ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது.
  • இதன் அறிவியல் பெயர் பெடோஸ்டிப்ஸ் டியூபர்குலோசிஸ் (Pedostibes tuberculosus) ஆகும். இது உள்ளூரில் மலேநாடின மர கண்டிகப்பே என்று அழைக்கப்படுகிறது மற்றும் பிரபலமாக பேது என அழைக்கப்படுகிறது.
  • இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய அகணிய உயிரியாகும்; இது முக்கியமாக பசுமை மாறாக் காடுகள், மரங்கள் மற்றும் புதர்களில் வாழ்கிறது.
  • பசுமை மாறாக் காடுகளின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய இனமாக இது செயல்படுகிறது.
  • கர்நாடகாவின் மற்ற மாநிலச் சின்னங்களில் ஆசிய யானை (விலங்கு), பனங்காடை (பறவை), சந்தனமரம் (மரம்), தாமரை (பூ), தென் அழகிப் பட்டாம்பூச்சி (பட்டாம்பூச்சி), கர்நாடக கெண்டை மீன் (மீன்) மற்றும் மாம்பழம் (பழம்) ஆகியவை அடங்கும்.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் விவசாய உற்பத்தித் திறனில் ஆசியத் தேனீயின் பங்கிற்காக, 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் அதனைத் தனது மாநிலத் தேனீயாகவும் கர்நாடகா அறிவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்