TNPSC Thervupettagam

கர்மயோகி திட்டம்

September 6 , 2020 1799 days 2186 0
  • குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுத் திட்டமான கர்மயோகி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தனிப்பட்ட குடிமைப் பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் நிறுவன அமைப்புகளின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய இந்தியாவின் நோக்கத்திற்கு ஏற்ப சரியான அணுகுமுறை, திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எதிர்காலத் குடிமைப் பணியாளர்களை உருவாக்க இத்திட்டமானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • கர்மயோகி  திட்டத்தின் முக்கிய நோக்கமானது  எதிர்கால இந்திய குடிமைப் பணியாளர்களைப் படைப்பாற்றலுடனும், புத்தாக்கச் சிந்தனைகளுடனும், தொழிற்பண்பட்டவராக, முற்போக்காக, ஆக்கப்பூர்வமாக, கற்பனை வளமுடன், வெளிப்படையாக, செயல்திறன் மிக்க, ஆற்றல் மிக்க மற்றும் தொழில்நுட்பத்தை இயக்கக் கூடியவர்களாக மாற்றுவதன் மூலம் அவர்களைத் தயார்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்