இந்த அறிக்கையை தேசியக் குற்றப் பதிவு ஆவணங்கள் காப்பகமானது (National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களிலிருந்து கடந்த ஆண்டு நாடு முழுவதும் தற்கொலை வழக்குகள் மற்றும் தற்செயலான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்கொலைகள்
இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் தினமும் சராசரியாக 381 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அறியப் படுகிறது.
நாட்டில் தற்கொலைகள் 1,34,516 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,39,123 ஆக உயர்ந்துள்ளது.
பண்ணைத் தொழில் சார்ந்தோரின் தற்கொலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்துள்ளது.
பெரும்பாலான அளவில் வேலையில்லாதவர்களின் தற்கொலைகள் கேரளாவில் 14% ஆகவும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (10.8%), தமிழ்நாடு (9.8%), கர்நாடகா (9.2%) மற்றும் ஒடிசா (6.1%) ஆகிய மாநிலங்களும் உள்ளன.
வணிக நடவடிக்கைகளில் இருப்பவர்களின் பெரும்பாலான அளவிலான தற்கொலைகள் மகாராஷ்டிராவிலும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிகழ்கிறது.
அகில இந்தியச் சராசரியுடன் ஒப்பிடும் போது நகரங்களில் தற்கொலை விகிதமானது (13.9%) அதிகமாக உள்ளது.
மக்கள் திரள்/குடும்ப ரீதியிலான தற்கொலைகள் பெரும்பாலானவை தமிழ்நாடு (16), ஆந்திரா (14), கேரளா (11), பஞ்சாப் (9) மற்றும் ராஜஸ்தான் (7) ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
தற்செயலான இறப்புகள்
நாட்டில் தற்செயலான இறப்புகளானது 2.3% அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக இறப்புகள் (70,329) பதிவாகியுள்ளன. இது மொத்தத்தில் ஆறில் ஒரு பங்காகும்.
இதன் முக்கிய காரணம் ‘போக்குவரத்து காரணமான விபத்துக்கள்’ (43.9%) ஆகும்.
மின்னல் காரணமாக அதிக இறப்புகள் (400) பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் (334) மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன (321).