TNPSC Thervupettagam

கல்வி வளர்ச்சி நாள் 2026 - ஜூலை 15

July 19 , 2026 8 days 95 0
  • காமராஜரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • கல்வியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிப்பது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்துப் பள்ளிகளிலும் இந்த தினத்தைக் கொண்டாடுவது கட்டாயமாக்கப்பட்ட 'தமிழ்நாடு கல்வி வளர்ச்சி நாள் (அறிவிப்பு மற்றும் கொண்டாட்டம்) சட்டம், 2006' இயற்றப்பட்ட பிறகு, இந்நாள் 2006 ஆம் ஆண்டில் முதல்முறையாகக் கொண்டாடப் பட்டது.
  • ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறப்பது, இலவசக் கல்வியை விரிவுபடுத்துவது மற்றும் பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக என்று மதிய உணவுத் திட்டத்தை வலுப்படுத்துவது போன்ற பெரிய கல்வி சீர்திருத்தங்களை காமராஜர் அறிமுகப் படுத்தினார்.
  • கே. காமராஜர் 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார் என்பதுடன் அவரது பல்வேறு கல்விச் சீர்திருத்தங்களுக்காக தமிழ்நாட்டின் "கல்வித் தந்தை" என்று பிரபலமாக அறியப் படுகிறார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்