கவி மற்றும் யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) ஆகியவை R21/Matrix-M மலேரியா தடுப்பூசிகளை மேலும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
90 மில்லியன் டாலர் வரையில் சேமிக்கும் இந்த ஒப்பந்தம் மூலம், ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7 மில்லியன் குழந்தைகளுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் தவணைகளை வழங்கப்பட உள்ளது.
WHO ஆனது அதிக ஆபத்தில் உள்ள குழந்தைகளில் மலேரியா பாதிப்புகளை 50–75% குறைக்கின்ற R21/Matrix-M மற்றும் RTS, S/AS01 ஆகிய இரண்டு தடுப்பூசிகளை முன் கூட்டியே தகுதிப் படுத்தியது.
உலகளாவிய மலேரியா பாதிப்பில் 70% பங்கினை உள்ளடக்கியுள்ள 24 ஆப்பிரிக்க நாடுகளில் கவியின் மலேரியா தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 40 மில்லியனுக்கும் அதிகமான தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.