உலகின் மிக அதிக எடையுள்ள கிளி இனமான, நியூசிலாந்தின் மிகக் கடுமையான அழிவின் விளிம்பில் உள்ள 'காகாபோ' (kākāpō) பறவைகளின் எண்ணிக்கை, 1995-ஆம் ஆண்டில் 51-ஆக இருந்த நிலையில் தற்போது 325-ஆக உயர்ந்துள்ளது.
காகபோ, அறிவியல் ரீதியாக ஸ்ட்ரிகோப்ஸ் ஹாப்ரோப்டிலா (Strigops habroptila) என அழைக்கப் படுகிறது, இது IUCN செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு இனப்பெருக்கப் பருவம் 90 குஞ்சுகளை உருவாக்கியது, இது நவீன மீட்புத் திட்டத்தின் கீழ் பதிவான அதிகபட்ச அளவாகும்.
காகபோ என்பது நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத கிளி இனம் ஆகும்.
பாதுகாப்பு ஆர்வலர்கள் எஞ்சியிருக்கும் பறவைகளை வேட்டையாடுபவர்கள் இல்லாத கடல் தீவுகளுக்கு மாற்றினர் மற்றும் தீவிர கண்காணிப்பு மற்றும் இனப்பெருக்கத் திட்டங்களைத் தொடங்கினர்.
ரிமு மரங்கள் அதிக பழங்களை உருவாக்கும் போது, அவை வழக்கமாக 2-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்கின்றன.