TNPSC Thervupettagam

காட்டு யானைகளின் கணக்கெடுப்பு 2025

October 10 , 2025 14 hrs 0 min 11 0
  • தமிழ்நாடு மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், 3,170 காட்டு யானைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2024 ஆம் ஆண்டில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 அதிகமாகும்.
  • இந்த ஒத்திசைவுக் கணக்கெடுப்பு ஆனது நேரடி மற்றும் மறைமுக முறைகளைப் பயன்படுத்தி 26 வனப் பிரிவுகளில் சுமார் 8,989.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற் கொள்ளப் பட்டது.
  • நீலகிரி யானைகள் வளங்காப்பகத்தில் 2,419 யானைகள் (தொகுதி எண்ணிக்கை) மற்றும் 3,163 யானைகள் (சாண எண்ணிக்கை) என்ற அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
  • மொத்த எண்ணிக்கையில் 44% யானைகள் நன்கு வளர்ந்த இளம் பருவ யானைகள் ஆகும் என்ற நிலையில் அவற்றுள் 1.77 பெண் யானைகளுக்கு 1 ஆண் யானை என்ற பாலின விகிதம் பதிவு செய்யப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்