TNPSC Thervupettagam

காமன்வெல்த் போர்க் கல்லறை ஆணையம்

January 19 , 2022 1400 days 603 0
  • ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைந்துள்ள காமன்வெல்த் போர்க் கல்லறை ஆணையம் ஆனது அசாதாரண அம்சங்களுடன் கூடிய ஐந்து தளங்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்தத் தளங்கள் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருடன் தொடர்பு கொண்டு உள்ளவை ஆகும்.
  • அவற்றில் நாகாலாந்தின் கோஹிமா போர் மயானமும் (கல்லறை) ஒன்றாகும்.
  • கோஹிமா போர்க் கல்லறை என்பது இரண்டாம் உலகப் போரின் போது 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொஹிமாவில் உயிரிழந்த நேச நாட்டுப் படைகளின் 2வது பிரிட்டிஷ் படைப் பிரிவின் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவு இடமாகும்.
  • காமன்வெல்த் போர்க் கல்லறை ஆணையம் போர்களில் உயிரிழந்த ஆண்களும் பெண்களும் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள் என்பதைப் பறை சாற்றும் ஆறு உறுப்பு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • இந்த ஆணையத்தில் ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய  நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்