2021 ஆம் ஆண்டில் சீனாவில் 1,000 பேருக்கு 7.52 குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் (பொதுவுடைமை) சீன நாடு நிறுவப்பட்டதிலிருந்து பதிவாகிய மிகக் குறைந்த தரவு இதுவே ஆகும்.
வேகமாக அதிகரித்து வரும் வயது முதிர்ந்த தொழிலாளர் வளம், பல தசாப்தங்களாக நீடித்து வரும் பலவீனமான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மந்த நிலையிலான பொருளாதாரம் ஆகியவற்றுடன் சேர்த்து, அச்சுறுத்தும் நிலையிலான மக்கள்தொகை நெருக்கடியுடன் சீனா போராடி வருகிறது.
2016 ஆம் ஆண்டில், சீனா அதன் நாட்டில் அறிவிக்கப்பட்ட "ஒரு குழந்தைக் கொள்கை" என்பதையும் தளர்த்தியது.
தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிக்கும் ஒரு கொள்கையை 2021 ஆம் ஆண்டில் சீனா நீட்டித்தது.