TNPSC Thervupettagam

காற்றாலை மின் உற்பத்தித் திறன் வளர்ச்சி 2024/25

June 22 , 2025 9 days 55 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய காற்றாலை மின் உற்பத்தித் திறன் மீதான சேர்ப்பில் கர்நாடகா மாநிலம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • இது அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகபட்சமாக 1,331.48 மெகாவாட் மின் உற்பத்தி திறனை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை முறையே 1,136.37 மெகா வாட் மற்றும் 954.76 மெகா வாட் திறன் உருவாக்கத்துடன் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா தற்போது 51.5 ஜிகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனைக் கொண்டு உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW அளவிலானப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எட்டுவதே நாட்டின் இலக்காகும்.
  • இதில் காற்றாலை மின் உற்பத்தியில் இருந்து 100 GW, கடல்சார் மூலங்களிலிருந்து 30 GW ஆற்றல் உற்பத்தி செய்யப்படும்.
  • மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், சூரிய மின் உற்பத்தித் திறன் 31.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இந்தியா நிறுவப்பட்டக் காற்றாலை ஆற்றல் சார் மின் உற்பத்தி திறனைக் கொண்ட நான்காவது பெரியதொரு நாடாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் உள்ளது.
  • இங்கு சூரிய மின்னாற்றல் உற்பத்தியைத் தொடர்ந்து இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் காற்றாலை மின் உற்பத்தி இரண்டாவதாக பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
  • குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிக திறன் கொண்ட மாநிலங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்