TNPSC Thervupettagam

காற்றுத் தரக் குறியீடு 2025

November 7 , 2025 14 days 77 0
  • 2025 ஆம் ஆண்டில் உலகின் மோசமான காற்றுத் தரங்கள் கொண்ட நகரங்கள் தரவரிசையில் இந்திய நகரங்கள் முதல் 40 இடங்களைப் பிடித்துள்ளன.
  • இராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் 840 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) மோசமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
  • ஹரியானாவில் உள்ள சிவானியில் 644 என்ற இரண்டாவது மிக உயர்ந்த AQI குறியீடு பதிவானது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பஞ்சாபில் உள்ள அபோஹர் 634 குறியீட்டினைக் கொண்டுள்ளது.
  • டெல்லி 433 என்ற AQI உடன் உலகளவில் 13வது இடத்தைப் பிடித்ததுடன், 'கடுமையான காற்று மாசுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் உள்ள பிற முக்கிய நகரங்களில் வட இந்தியாவில் உள்ள ஹிசார், சுரு, சர்கி தாத்ரி மற்றும் ரோஹ்தக் ஆகியவை அடங்கும்.
  • AQI பிரிவுகள் ஆனது, நல்ல நிலை (0–50), திருப்திகரமான நிலை (51–100), மிதமான மாசுபாடு (101–200), மோசமான நிலை (201–300), மிகவும் மோசமான நிலை (301–400), மற்றும் கடுமையான நிலை (401–500) என வரையறுக்கப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்