கால்நடை இனங்கள் - கரன் ஃப்ரைஸ் மற்றும் விருந்தாவனி
January 22 , 2026 2 days 49 0
இந்திய அரசாங்கம் கரன் ஃப்ரைஸ் மற்றும் விருந்தாவனி ஆகிய இரண்டு அதிக பால் தரும் செயற்கை கால்நடை இனங்களை பதிவு செய்துள்ளது.
கரன் ஃப்ரைஸ் ஹரியானாவின் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NDRI) உருவாக்கப்பட்டது.
இது உள்நாட்டுத் தார்பர்கர் பசுக்களை ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் காளைகளுடன் கலப்பினப் படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
ஒரு கரன் ஃப்ரைஸ் பசு 10 மாத பாலூட்டும் காலத்தில் 3,500 கிலோவுக்கு மேல் பால் வழங்கக் கூடியது என்பதோடுஅதிகபட்ச தினசரி மகசூல் 46.5 கிலோ வரை இருக்கும்.
ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன், பிரவுன் சுவிஸ், ஜெர்சி மற்றும் உள்நாட்டு ஹரியானா கால்நடைகளைக் கலப்பினப்படுத்துவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள ICAR-இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (IVRI) விருந்தாவனி உருவாக்கப் பட்டது.
இந்தச் செயற்கை இனங்கள் அதிக பால் உற்பத்தித் திறனுடன் தகவமைப்பு மற்றும் இந்தியச் சூழல்களுக்கு ஏற்ப தகவமைப்புத் தன்மையை கொண்டுள்ளன.
இரண்டு இனங்களும் இந்தியாவில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில் மரபணுப் பன்முகத்தன்மையைப் பேணி விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துகின்றன.