TNPSC Thervupettagam

கால்நடை இனங்கள் - கரன் ஃப்ரைஸ் மற்றும் விருந்தாவனி

January 22 , 2026 2 days 47 0
  • இந்திய அரசாங்கம் கரன் ஃப்ரைஸ் மற்றும் விருந்தாவனி ஆகிய இரண்டு அதிக பால் தரும் செயற்கை கால்நடை இனங்களை பதிவு செய்துள்ளது.
  • கரன் ஃப்ரைஸ் ஹரியானாவின் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தால் (NDRI) உருவாக்கப்பட்டது.
  • இது உள்நாட்டுத் தார்பர்கர் பசுக்களை ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன் காளைகளுடன் கலப்பினப் படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
  • ஒரு கரன் ஃப்ரைஸ் பசு 10 மாத பாலூட்டும் காலத்தில் 3,500 கிலோவுக்கு மேல் பால் வழங்கக் கூடியது என்பதோடு அதிகபட்ச தினசரி மகசூல் 46.5 கிலோ வரை இருக்கும்.
  • ஹோல்ஸ்டீன்-ஃப்ரீசியன், பிரவுன் சுவிஸ், ஜெர்சி மற்றும் உள்நாட்டு ஹரியானா கால்நடைகளைக் கலப்பினப்படுத்துவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள ICAR-இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (IVRI) விருந்தாவனி உருவாக்கப் பட்டது.
  • இந்தச் செயற்கை இனங்கள் அதிக பால் உற்பத்தித் திறனுடன் தகவமைப்பு மற்றும் இந்தியச் சூழல்களுக்கு ஏற்ப தகவமைப்புத் தன்மையை கொண்டுள்ளன.
  • இரண்டு இனங்களும் இந்தியாவில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில் மரபணுப் பன்முகத்தன்மையைப் பேணி விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்