TNPSC Thervupettagam

கால்நடை சுகாதாரம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்

March 9 , 2025 54 days 91 0
  • மத்திய அமைச்சரவையானது கால்நடை சுகாதாரம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தினை (LHDCP) மாற்றியமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தில் தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் (NADCP), கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாடு (LH&DC) மற்றும் பசு ஆஷாதி ஆகிய மூன்று கூறுகள் உள்ளன.
  • நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய்களைத் தடுப்பதன் வழியாக கால்நடை இழப்புகளைக் குறைக்க LHDCP உதவும்.
  • இந்தத் திட்டம் ஆனது, நடமாடும் கால்நடை நல மையங்களின் (ESVHD-MVU) பல்வேறு உட்கூறுகள் மூலம் கால்நடை சுகாதாரப் பராமரிப்பை வீட்டிற்கே சென்று வழங்கும் வசதியினை ஆதரிக்கிறது.
  • இது பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி கேந்திரா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் வலை அமைப்பு மூலம் கால்நடை மருத்துவத்திற்கான (பசு ஔஷாதியின்) பொதுப் பெயர் மருந்துகள் அதிகளவில் கிடைக்கும் தன்மையையும் மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்