பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகம் ஆனது, பெண்களுக்கு ஏற்ற மாதிரி கிராமப் பஞ்சாயத்து (MWFGP) முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது அடிமட்ட நிலையில் பெண்களின் பங்கேற்பு, அவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாலினம் சார்ந்த உள்ளடக்கத்தினை கொண்ட நிர்வாக முன்னெடுப்பாகும்.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள பெண்களுக்கு ஏற்ற மாதிரி கிராமப் பஞ்சாயத்து நிறுவப்பட உள்ளது.
முன்னேற்றம் மற்றும் செயல்படுத்துதலைக் கண்காணிப்பதற்காக என்று பிரத்தியேக கண்காணிப்பு முகப்பு தளமானது தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்துடன் சேர்த்து, 2025 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் தேதியன்று அந்த அமைச்சகம் ஆனது, நாடு தழுவிய மகிளா கிராம சபைகளை ஏற்பாடு செய்து உள்ளது.