காவல் துறையின் தலைமை இயக்குநரைத் தேர்வு செய்யும் முறை (தமிழ்நாடு)
July 6 , 2021 1501 days 684 0
சைலேந்திர பாபு, கரண் சின்கா மற்றும் சஞ்சய் அரோரா ஆகியோரின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலுக்கு மத்திய குடிமைப் பணி ஆணையமானது ஒப்புதல் அளித்தது.
அதன் பிறகு தமிழக அரசானது இந்த மூன்று நபர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படும் காவல் துறையின் தலைமை இயக்குநரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.
காவல் துறையின் துணைத் தலைமை இயக்குநர் தகுதியிலுள்ள 30 ஆண்டு காலப் பணிச் சேவையை முடித்தவர்கள் காவல்துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பை பெற தகுதியுடையவராவர்.
மத்திய குடிமைப் பணி ஆணையமானது இந்த தேர்வு முறைக்கு, 2006 ஆம் ஆண்டு பிரகாஷ்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த ஒரு ஆணையைப் பின்பற்றுகிறது.