October 7 , 2025
3 days
28
- காவிரி டெல்டா பகுதியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.2 லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த, சம்பா சாகுபடி பரப்பானது இந்த ஆண்டு 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே பருவக் காற்று சாரா மழைப் பொழிவு காரணமாக குறுவை சாகுபடியில் விதைப்பு தாமதமாக நடந்ததால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- நெல் சாகுபடிப் பரப்பானது இந்த ஆண்டு குறுவை சாகுபடி பருவத்தில், 6 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது வழக்கமான 4.4 லட்சம் ஏக்கரை விடவும், முந்தைய ஆண்டு 3.9 லட்சம் ஏக்கரை விடவும் அதிகமாகும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 25% வயல்கள் செப்டம்பர் மாத இறுதி வரை அறுவடை செய்யப்படாமல் இருந்ததுடன் குறுவை சாகுபடியில் ஏற்பட்ட அறுவடை தாமதமானது, சம்பா சாகுபடி விதைப்பினை சரியான நேரத்தில் விதைப்பதைப் பாதிக்கிறது.
- 2023–24 ஆம் ஆண்டில் காவிரி டெல்டா 26.9 லட்சம் டன் அல்லது தமிழ்நாட்டின் 70.5 லட்சம் டன் நெல் உற்பத்தியில் 38% பங்கினைக் கொண்டுள்ளது.

Post Views:
28