TNPSC Thervupettagam

காவிரி படுகைக்கான புதிய வழிகாட்டுதல்கள்

June 29 , 2026 15 days 101 0
  • காவிரி படுகையில் நீர்வளத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களுக்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.
  • புதிய வழிகாட்டுதல்களின்படி, விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு முன் மாநிலங்கள் முதற்கட்ட அறிக்கை (PR), முன் சாத்தியக் கூறு அறிக்கை (PFR) அல்லது கருத்துருக் குறிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
  • மத்திய நீர் ஆணையம் (CWC) இந்த முன்மொழிவை ஆய்வு செய்து தனது தொழில் நுட்பக் குறிப்பை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) அனுப்பும்.
  • புதிய வழிகாட்டுதல்களின் படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 6 மாதங்களுக்குள் தனது கருத்துகளைத் தெரிவிக்கவில்லை என்றால், அது அவர்களின் ஒப்புதலாக கருதப்படும்.
  • காவிரி ஒரு நீர் பற்றாக்குறை படுகை என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு, இந்த வழி காட்டுதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதும் விதிமுறை குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்கள் 2017 ஆம் ஆண்டு திட்ட மதிப்பீட்டு விதிமுறைகள் மற்றும் 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்