TNPSC Thervupettagam

கியாசானூர் வன நோய்

May 26 , 2021 1518 days 949 0
  • கியாசானூர் வன நோயினை விரைவில்  கண்டறிவதற்கான ஒரு அதிக உணர் திறனுடைய, நோயாளியை வைத்திருக்கும் இடத்திலேயே (Point of Care) சோதனை செய்யும் ஒரு புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
  • இந்த வகை பரிசோதனை முறையானது இந்திய மருத்துவக் கழகத்தின் தேசிய நச்சுயிரியல் கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த முறையானது குரங்குக் காய்ச்சல் எனப்படும் கியாசானூர் வனநோயைக் கண்டறியவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இது இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு ஒட்டுண்ணியால் (ticks) உண்டாகக் கூடிய இரத்த இழப்பினை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோயாகும்.
  • இது ஃபிளாவிவிரிடே (Flaviviridae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த வைரசினால் உண்டாக்கப் படுகிறது.
  • பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்