சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஆனது 2015 ஆம் ஆண்டு பாரிசு உடன்படிக்கை இருந்த போதிலும் 1997 ஆம் ஆண்டு கியோட்டோ நெறிமுறை சட்டப்பூர்வமாகச் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பளித்தது.
சர்வதேச சட்டத்தின் கீழ் உலக நாடுகள் கியோட்டோ நெறிமுறையின் விதிகள் மற்றும் உமிழ்வு இலக்குகளுக்கு இணங்க வேண்டும்.
இந்த நெறிமுறையின் முதல் உறுதிப்பாட்டுக் காலம் 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும், இரண்டாவது உறுதிப்பாட்டுக் காலம் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் இருந்தது.
இங்கு பாரிசு உடன்படிக்கையானது கியோட்டோ நெறிமுறையை நிறுத்தவில்லை என்றாலும் 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய உறுதிப்பாட்டுக் காலம் எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை.
கியோட்டோ நெறிமுறையுடன் இணங்காதது சர்வதேச அளவில் தவறான செயலாகக் கருதப்படலாம்.
ICJ தீர்ப்பு ஆனது ஆலோசனை சார்ந்தது மற்றும் உலகளவில் பருவநிலைப் பொறுப்பு உணர்வை அதிகரிப்பதற்கும் வழக்குத் தொடரவும் வழி வகுக்கும்.