TNPSC Thervupettagam

கிராம் உஜாலா திட்டம்

March 24 , 2021 1574 days 1246 0
  • இந்திய அரசு கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவான LED பல்புகளை வழங்குவதற்கான “கிராம் உஜாலா திட்டத்தினை” தொடங்கியுள்ளது.
  • இது கிராமப்புறப் பகுதிகளில் வெறும் ரூ. 10க்கு உலகின் விலைமலிவான LED  பல்புகளை வழங்குகிறது.
  • மேலும் இது கிராமப்புற நுகர்வோர்களிடமிருந்து ஒளிரும் விளக்குகள் மற்றும் CFL (சிறிய ஒளிரும் விளக்குகள்) பல்புகளைத் திரும்ப பெறவும் வேண்டி விதிமுறைகளை கூறியுள்ளது.
  • இத்திட்டமானது அரசின் ஆதரவுடனோ (அ) மானியத்துடனோ தொடங்கப்படவில்லை.
  • இத்திட்டம் முற்றிலும் கார்பன் வரவினத்தின் (Carbon Credits) மூலமாக நிதியைப் பெறும்.
  • இந்நிதியானது, ஐ.நா.வின் தூய்மை மேம்பாட்டு நடைமுறையின் (CDM) கீழ் கோரப் படும்.
  • இது இந்தியாவில் இது போன்ற திட்டங்களில் முதல் வகையாகும்.
  • இத்திட்டம் மத்திய மின்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • முதல் கட்டமாக இத்திட்டம் பீகாரிலுள்ள ரா மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
  • இக்கட்டத்தில் சுமார் 15 மில்லியன் LED பல்புகள் ரா (பீகார்), விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்), வாரணாசி (உத்தரப்பிரதேசம்), நாக்பூர் (மகாராஷ்டிரா) மற்றும் மேற்கு குஜராத் ஆகிய மாவட்டங்களின் கிராமங்களுக்கு வழங்கப்படும்.
  • 2014 ஆம் ஆண்டில், முந்தைய உன்னத் ஜோதி திட்டம், அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையிலான மின்விளக்குகள் (உஜாலா) திட்டத்தின் கீழ் LED பல்புகளின் விலையினைப் பெருமளவில் குறைத்து இருந்தது.
  • மதிப்பின் அடிப்படையில் இந்தியாவானது உலகின் இரண்டாவது பெரிய LED பல்புகளின் சந்தையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்