TNPSC Thervupettagam

கென் – பெட்வா நதியிணைப்பு

March 24 , 2021 1574 days 858 0
  • மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநில முதல்வர்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கென்-பெட்வா நதியிணைப்புத் திட்டத்தினை அமல்படுத்த செய்வவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இது நாட்டின் முதல் நதியிணைப்புத் திட்டமாகும்.
  • இத்திட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்ட பந்தேல்கண்ட் பகுதிக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதற்காக மத்தியப் பிரதேசத்திலுள்ள கென் நதியிலிருந்து உத்திரப் பிரதேசத்திலுள்ள பெட்வா நதிக்கு உபரி நீரை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
  • கென் மற்றும் பெட்வா ஆகிய நதிகள் மத்தியப் பிரதேசத்தில் உருவாகின்றன. இவை யமுனை ஆற்றின் துணை ஆறுகளாகும்.
  • கென் நதியானது உத்திரப் பிரதேசத்தின் பன்டா மாவட்டத்தில் யமுனை ஆற்றினையும் உத்திரப் பிரதேசத்திலுள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் பெட்வா நதியினையும் சந்திக்கிறது.
  • கென் நதி மத்தியப் பிரதேசத்திலுள்ள பன்னா புலிகள் காப்பகத்தின் வழியே கடந்து செல்கிறது.
  • தௌதான் அணையின் கட்டுமானத்தால் பன்னா புலிகள் காப்பகத்தின் 10%  முக்கிய வாழிடப் பகுதியானது நீரில் மூழ்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்