சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2021
March 24 , 2021 1574 days 621 0
இம்மசோதா 1957 ஆம் ஆண்டு கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
இது மூலோபாய மற்றும் வணிகச் சுரங்களுக்கிடையேயான வேறுபாட்டை அகற்றச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மாவட்டக் கனிம அறக்கட்டளையினால் பராமரிக்கப்படும் நிதிகளின் அமைப்பு மற்றும் பயன்பாடு குறித்த வழிமுறைகளை வழங்குவதற்கு வேண்டி மத்திய அரசிற்கு அதிகாரமளிக்கிறது.
ஏதேனும் ஒரு சுரங்கத்தை (நிலக்கரி, லிக்னைட் மற்றும் அணு கனிமங்கள் தவிர) ஏலத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட தாதுவின் உற்பத்தி மீதான பயன்பாட்டிற்காக (எஃகு தொழிற்சாலைக்கான இரும்புத் தாது) குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசிற்கு இம்மசோதா அனுமதியளிக்கிறது.
1957 ஆம் ஆண்டு கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், கனிமங்களுக்கான சலுகை ஏலங்களை (நிலக்கரி, லிக்னைட் மற்றும் அணு கனிமங்கள் தவிர) மாநில அரசுகள் நடத்தும் எனக் கூறுகிறது.