TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2021

March 23 , 2021 1575 days 644 0
  • தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சில சாதியினருக்கு என்று சில விதி விலக்குகளுடன் “தேவேந்திர வேளார்” என்ற பெயரின் கீழ் ஏழு சாதிகளை உள்ளிடுவதற்கு இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
  • அவை தேவேந்திர குலத்தான், கடையன், கள்ளடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வைத்திரியன் ஆகியனவாகும்.
  • இம்மசோதா தமிழ்நாட்டிலுள்ள பட்டியலிடப்பட்ட சாதியினர் பட்டியலை மாற்றிமைப்பதற்காக அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை 1950 என்ற ஆணையினைத் திருத்தி அமைக்க உள்ளது.
  • இம்மசோதாவினை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தியது.
  • அரசியலமைப்புச் சட்டமானது வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் பட்டியலிடப்பட்ட சாதியினர்களை குறிப்பிடுவதற்கு வேண்டி குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது.
  • மேலும், அறிவிக்கப்பட்ட அந்த பட்டியலின சாதியினர் பட்டியலைத் திருத்தி அமைக்க பாராளுமன்றத்திற்கு அனுமதி அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்