இம்மசோதா 1938 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தைத் திருத்தி அமைக்கிறது.
இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் அதிகபட்ச அந்நிய முதலீட்டைச் செய்வதற்கு இம்மசோதா அனுமதியளிக்கிறது.
இம்மசோதா, இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டை 49% என்ற அளவிலிருந்து 74% என்ற அளவிற்கு உயர்த்துகிறது.
மேலும் இம்மசோதா உரிமை மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றின் மீது உள்ள சில தடைகளையும் நீக்குகிறது.
அந்நிய நாட்டு நிறுவனங்களிடம் கட்டுப்பாடு இருக்கும் அதே சமயத்தில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் இந்தியாவில் வசிக்கும் குடிமகன்களாக பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் முக்கிய மேலாண்மை அலுவலர்கள் இருப்பர்.
காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடானது 2000 ஆம் ஆண்டில் முதல்முறையாக 26% என்ற வரம்பு வரை அனுமதிக்கப் பட்டிருந்தது.