TNPSC Thervupettagam

சிஆர்பிஎஃபின் 82வது அமைப்பு தினம் – மத்திய ரிசர்வ்/சேமக் காவல் படை

March 22 , 2021 1577 days 646 0
  • மத்திய ரிசர்வ் (சேமக்) காவல் படையானது இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதமேந்திய காவல் படையாகும்.
  • இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • இது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27, அன்று மன்னரின்  பிரதிநிதித்துவம் பெற்ற காவலர் படையாக நடைமுறைக்கு வந்தது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28, அன்று மத்திய ரிசர்வ் காவல்படை சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இது மத்திய ரிசர்வ் காவல் படை என்று பெயர் மாற்றம் பெற்றது.
  • 1950 ஆம் ஆண்டில் மார்ச் 19 ஆம் நாளன்று அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல் மத்திய ரிசர்வ் காவல் படைகளுக்கு குடியரசுத் தலைவரின் வண்ண அடிப்படையிலான விருதுகளை அறிமுகப்படுத்தினார்.
  • 1986 ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே முதல் மகளிர் படைப்பிரிவினை மத்திய ரிசர்வ் காவல் படை உருவாக்கியது.
  • இப்படை நக்சலிச தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.
  • மேலும் இது வைஷ்ணவோ தேவி, ராம ஜென்மபூமி மற்றும் அமர்நாத் போன்ற புனித தலங்களின் பாதுகாப்பிற்கும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்