கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே முக்கிய கம்பிவடம் தாங்கிய தொங்குப் பாலத்தினைக் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைத்து நல்லமலா வனப்பகுதி வழியாக கடந்து செல்லும்.
ஆற்றின் குறுக்கே கட்டப்படும் இந்தப் பாலமானது, நீளமான கண்ணாடியால் ஆன பாதசாரிகளுக்கான நடைபாதை, கோபுரம் போன்ற தூண்கள், ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒரு பெரிய போக்குவரத்து இடைவெளி போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கும்.