TNPSC Thervupettagam

கிரேக்கத்தில் 200 பழங்காலத் தளங்கள்

April 12 , 2026 15 hrs 0 min 10 0
  • கிரேக்கத்தில் உள்ள எவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய தொல்பொருள் ஆய்வில், 6,000 ஆண்டுகால மனித வரலாற்றை வெளிப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட பழங்காலத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இந்த ஆய்வானது கிரேக்கத்தில் உள்ள சுவிஸ் தொல்பொருள் பள்ளியால் 30 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நடத்தப்பட்டது.
  • பண்டைய நகரமான எரீட்ரியாவுடன் தொடர்புடைய பண்ணைகள், குடியிருப்புகள், குவாரிகள் மற்றும் சாலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • புதைந்துள்ள சுவர்கள் மற்றும் பாதைகள் போன்ற மறைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் கண்டறிய LiDAR (ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு நிர்ணயம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டது.
  • இப்பகுதியில் விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த டெம்ஸ் (கிராமப்புற நிர்வாக அலகுகள்) இருந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்