- கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கிஷ்கிந்தா மலைகளில் ஒரு புலி கேமராவில் சிக்கியுள்ளது.
- இப்பகுதியின் இந்த வனப்பகுதியில் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு இது கடைசியாகக் காணப்பட்டது.
- இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் வனவிலங்கு வழித்தடத்திலிருந்து இங்கு வந்திருக்கலாம்.
கிஷ்கிந்தா மலைகள் பற்றிய குறிப்பு
- இந்த மலை துங்கபத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
- இதனைச் சுற்றியுள்ள பீடபூமி சுமார் 3,000 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது பூமியின் மிகப் பழமையான மேற்பரப்பு அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.
- இது கர்நாடகாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹம்பிக்கு அருகே அமைந்துள்ளது.