TNPSC Thervupettagam

நீலக்குறிஞ்சி பாதுகாப்புத் திட்டம்

August 28 , 2026 16 days 137 0
  • நீலக்குறிஞ்சிக்கான வருடாந்திரப் பாதுகாப்பு திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு உத்தரவிடுமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை (NGT) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) வலியுறுத்தியுள்ளது.
  • நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியனா) என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உள்ளூர் புதர்ச் செடியாகும்; இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.
  • இது நீலகிரி, பழனி-கொடைக்கானல், ஆனைமலை மற்றும் மூணார்-இடுக்கி நிலப் பரப்புகள் உட்பட 14 சூழலியல் பகுதிகளில் 34 இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JNTBGRI), ஒரு சிற்றின-குறிப்பிட்ட பாதுகாப்பு செயல் திட்டத்தை முன்மொழிந்தது.
  • முக்கியப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சூழலியல் கண்காணிப்பு, சீரழிந்த மலைப் பகுதி புல்வெளிகளை மீட்டெடுத்தல், ஆக்கிரமிப்பு இனங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை அடங்கும்.
  • பாதுகாப்புத் திட்டம் வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் முக்கியமாகச் செயல்படுத்தப்படும் என்பதோடு இதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்