நிர்வாகம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் அரசு அதிகாரிகளின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினம் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று டெல்லி மெட்காஃப் ஹவுஸில் சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய உரையுடன் தொடர்புடையது என்பதோடு அங்கு அவர் அரசு அதிகாரிகளை "இந்தியாவின் எஃகுச் சட்டகம்" என்று அழைத்தார்.
இந்த நாள் இந்திய அரசால் 2006 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்புத் துறையால் (DARPG) இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது என்பதோடு மேலும் இதில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமரின் விருதுகளும் அடங்கும்.
குடிமைப் பணிகள் இந்தியா முழுவதும் கொள்கை அமலாக்கம், சட்டம் ஒழுங்கு, பேரிடர் மேலாண்மை மற்றும் அரசுச் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை ஆதரிக்கின்றன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Holistic Development – Saturation of Government Schemes" என்பதாகும்.