மும்பையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான மிஸ் சாகே இந்தியா பட்டத்தை மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோரும் கதக் கலைஞருமான நிஷிதா யோகேஷ் அந்தர்கர் வென்றுள்ளார்.
பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) ISO 50001:2018 ஆற்றல் மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில்எரிசக்தி மேலாண்மைக்காக இந்த உலகளாவியச் சான்றிதழைப் பெறும் இந்தியாவின் முதல் குடிநீர் வாரியம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
ஐ.நா. சீன மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் அமைப்பில் கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் பன்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் சீன மொழி அதன் ஆறு அதிகாரப் பூர்வ மொழிகளில் ஒன்றாகும்.