2022 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று, 1082 காவல்துறைப் பணியாளர்கள் காவல் துறைப் பதக்கங்களைப் பெற்றனர்.
அவர்களுள் 347 காவல்துறையினர் வீரதீரச் செயல்களுக்கானப் பதக்கத்தினையும், 87 நபர்கள் சிறப்பாகப் பணியாற்றியதற்கான காவல்துறைப் பதக்கத்தினையும், 648 பணியாளர்கள் மகத்தானச் சேவைக்கானப் பதக்கத்தினையும் பெற்றனர்.
இந்த ஆண்டு, ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 109 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மற்றும் 108 காவல் அதிகாரிகள் வீரதீரப் பணிகளுக்கான காவல்துறை விருதினைப் பெற்றனர்.
இவர்களைத் தவிர, 7 காவல்துறை வீரர்கள் சிறந்தச் சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்தச் சேவைப் பதக்கத்தினைப் பெற்றனர்.
மகத்தானச் சேவைக்கான சீர்திருத்தச் சேவைப் பதக்கத்தினை 38 வீரர்கள் பெற்றனர்.
குடியரசுத் தலைவரின் காவல்துறைப் பதக்கங்கள் என்பது இந்தியாவின் சட்டங்களை அமலாக்கும் துறையினருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதானது 1951 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இந்த விருதானது ஆரம்பத்தில், ‘குடியரசுத் தலைவரின் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விருதுகள்’ என்றழைக்கப்பட்டன.
இவை வீரதீரச் செயல்கள் அல்லது சிறப்பானச் சேவைக்காக வழங்கப்படுகிறது.