கடற்படையின் குறுகிய காலச் சேவை ஆணையத்தின் பெண் அதிகாரிகளுக்கு, அவர்களோடு பணிபுரியும் ஆண் அதிகாரிகளுக்கு இணையான நிரந்தர ஆணையம் அமைப்பதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நன்மைகள்
ஒரு நிரந்தர ஆணையம் என்றால் ஒருவர் ஓய்வு பெறும் வரை இராணுவ வேலையில் இருப்பதாகும்.
நிரந்தர ஆணையத்தின் மூலம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஓய்வு பெறும் முழு வயது வரை நாட்டிற்குச் சேவை செய்ய வாய்ப்பு உள்ளது.
குறுகிய காலச் சேவை ஆணையத்தின் ஒரு பெண் கடற்படை அதிகாரி 10 ஆண்டுகளில் ஓய்வு பெறுகிறார். அதே நேரத்தில் நிரந்தர ஆணையத்தில் உள்ள ஒருவர் இன்னும் நான்கு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்ற உரிமை உண்டு (மொத்தம் 14 ஆண்டுகள்).