குறைகரிமத் தொழில்நுட்பங்கள் குறித்த தேசியப் புத்தாக்க மாநாடு
March 5 , 2022 1250 days 474 0
எரிசக்தி செயல்திறன் வாரியமானது, குறைகரிமத் தொழில்நுட்பங்கள் குறித்த தேசியப் புத்தாக்க மாநாட்டினை நடத்துவதன் மூலம் தனது 20வது நிறுவன தினத்தை கொண்டாடியது.
தொழில்துறை மற்றும் வணிகம் போன்ற சில துறைகளில் பெருமளவில் இந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப் படும் போது கிடைக்கப் பெறும் ஆற்றல் சேமிப்பு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வின் குறைப்புத் திறன் போன்ற நன்மைகளை வழங்கும் புத்தாக்கப் படைப்புகளை முன் வைப்பதற்கான ஒரு தளம் இந்த மாநாடாகும்.
இந்த மாநாடானது குறைகரிமப் புத்தாக்கத்திலுள்ள வணிகமயமாக்கல் மற்றும் உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான நிதித் தேவை போன்ற சவால்கள் குறித்து கவனம் செலுத்துகிறது.