நம் நாட்டில் காற்றுப் பதனாக்கிகள்/குளிரூட்டிகள் (AC) இயங்கக் கூடிய வெப்பநிலை வரம்பைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் ஒரு புதிய விதியைத் திட்டமிட்டுள்ளது.
காற்றுப் பதனாக்கிகளுக்கான வெப்ப நிலையைத் தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப் படும், அதாவது 20°C வெப்பநிலைக்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தவோ முடியாது.
தற்போது, காற்றுப் பதனாக்கிகளின் வெப்பநிலை ஆனது 18°C வரை (சிலவற்றில் 16°C) அதிகபட்சமாக 30°C வரை வழங்கப்படுகிறது.
காற்றுப் பதனாக்கிகளின் வெப்பநிலையில் ஒவ்வொரு 1°C அதிகரிப்பும் அதன் ஆற்றல் பயன்பாட்டை 6% குறைக்கும்.