ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொதுச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் 5 வயதிற்கும் கீழுள்ள குழந்தைகளிடையே நிகழும் இறப்புகள் குறித்து “லான்செட் சர்வதேச சுகாதாரம்” என்ற பத்திரிக்கையில் ஒரு புதிய ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் 5 வயதிற்கு கீழ் மொத்தம் 1.2 மில்லியன் குழந்தைகள் (1000 குழந்தைகளுக்கு 47.8 குழந்தைகள்) இறந்துள்ளனர்.
உலகில் மிக அதிகமான குழந்தைகள் இந்தியாவில் இறந்துள்ளனர்.
குழந்தை இறப்பு விகிதமானது அஸ்ஸாமில் அதிகமாக உள்ளது. இங்கு 1000 குழந்தைகளுக்கு 73.1 குழந்தைகள் இறந்துள்ளனர். கோவாவில் இந்த விகிதம் 9.7 ஆக உள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே குழந்தை பிறத்தலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தடுக்கக் கூடிய தொற்று நோய்கள் ஆகியவை குழந்தைகளின் இறப்புக்கு முக்கியக் காரணங்களாகும்.
நோய்த் தடுப்பூசி அளித்தல், குழந்தைப் பிறப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நலன் மேம்பாடு ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த இறப்புகளைத் தடுக்க முடியும்.