இந்திய அரசு தற்பொழுது “ஸ்பேரோ திட்டம்” என்ற ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
ஸ்பேரோ (SPARROW) என்ற வார்த்தை ஆனது “சிறப்பான செயல்பாடு குறித்த நிகழ்நேர பதிவுச் சாளர மதிப்பீட்டு அறிக்கை” என்பதைக் குறிக்கும்.
இது பின்வருவனவற்றை அடைய எண்ணுகின்றது.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் (Central Board of Indirect Tax and Customs) 46,000த்திற்கும் மேற்பட்ட குரூப் B மற்றும் குரூப் C அதிகாரிகளுக்கான வருடாந்திர செயல்பாட்டு மதிப்பீட்டு அறிக்கைகளை (APARs - Annual Performance Appraisal Reports) நிகழ்நேரத்தில் பதிவு செய்தல்
மத்திய ஜிஎஸ்டி மற்றும் CBIC-ன் சுங்கப் பணிகளில் பணியாற்றும் பெரும் பணியாளர்களின் மொத்த திறமையையும் மன உறுதியையும் மேம்படுத்துதல்.
இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளுக்கான SPARROW-ன் APARsகளை நிகழ் நேரத்தில் பதிவு செய்தலானது 2016-17 ஆம் ஆண்டில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டது.