TNPSC Thervupettagam

குழந்தைகளின் பருவநிலை அபாய அறிக்கை 2026 - யுனிசெஃப்

June 22 , 2026 4 days 82 0
  • இந்தியாவில் சுமார் 392 மில்லியன் குழந்தைகள் (92%) கடுமையான வெப்பத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும், 89 மில்லியன் குழந்தைகள் தொடர்ச்சியான வெப்ப அலைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் யுனிசெஃபின் 'குழந்தைகளின் பருவநிலை அபாய அறிக்கை 2026' எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவின் ஒட்டுமொத்த பருவநிலை அபாய வெளிப்பாடு மதிப்பெண்ணை 9.21/10 ஆக அடையாளப்படுத்துகிறது என்பதோடு இது உலகளவில் மிக அதிக மதிப்பெண்களில் ஒன்றாகும்.
  • கடுமையான வெப்பத்திற்கு 10/10 மற்றும் காற்று மாசுபாட்டிற்கு 9.94/10 என்ற வெளிப்பாடு மதிப்பெண்களை இந்தியா பதிவு செய்துள்ளது, இது கடுமையான சுற்றுச் சூழல் அபாயங்களைக் குறிக்கிறது.
  • அதிக வறட்சி பாதிப்பு (8.84/10) மற்றும் வெப்ப அலைகள், வெள்ளம், குழந்தைகள் பாதிக்கப்படும் மாசுபாடு போன்ற பல்வேறு ஒன்றோடொன்று தொடர்புடைய அபாயங்களை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இது குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் குழந்தைகளுக்கான குறிப்பிட்ட தழுவல் நடவடிக்கைகளில் குழந்தைகள் சார்ந்த வெப்ப செயல் திட்டங்களில் உள்ள இடைவெளிகளை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்